Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக., காங்கிரஸ் கூட்டணி முறிவா ? அரசியலில் பரபரப்பு

Advertiesment
திமுக., காங்கிரஸ் கூட்டணி முறிவா ? அரசியலில் பரபரப்பு
, வெள்ளி, 10 ஜனவரி 2020 (18:27 IST)
ஒரு ஊராட்சி தலைவர் பதிவியோ துணைத்தலைவர் பதவியோ வழங்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் கே.எஸ், அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழக காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து பெருவாரியாக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ காங்கிரஸுக்கு ஒன்றுகூட வழங்கவில்லை என  காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே, ஆர். ராமசாமி ஆகியோர் கூடி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு  உள்ளனர்.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது :
 
திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட கான்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
 
ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ காங்கிரஸுக்கு ஒன்று கூட வழங்கவில்லை;  இதுகுறித்து மாவட்ட அளவில் பேசி எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.
 
27 மாவட்ட ஊரட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி கூட வழங்கவில்லை; ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் செயல் கூட்டணி  தர்மத்துக்கு எதிராக உள்ளது.
 
3030 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே திமுகவினரால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளாட்சியில் பதவி விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளதால் இது குறித்து ஸ்டாலின் முக்கிய முடிவு எடுப்பார் என தகவல்கள் வெளியாகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் ! ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சீமான் !