இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி பள்ளி சிறுவர்களின் போட்டி போல முடிந்தது. இந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸில் கூட 200 ரன்களுக்கு மேல் எட்டப்படவில்லை. தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயித்த 120 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட் செய்யும் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலிக் காரணமாக ரிட்டடயர்ட் ஹர்ட் ஆனார். அவர் இரண்டாவது இன்னிங்ஸிலும் பேட் செய்யவில்லை. அதுவும் இந்திய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. இந்த ஆடுகளத்தை சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும் எனக் கேட்டும் அதில் வெற்றி பெற முடியவில்லை என தலைமைப் பயிற்சியாளர் கம்பிர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் கங்குலி இது குறித்துப் பேசியுள்ளார். அதில் “ டெஸ்ட் போட்டிகளில் 300-400 ரன்கள் சேர்க்காமல் வெற்றி பெற முடியாது. மூன்று நாட்களில் போட்டியை முடிக்க நினைக்கக் கூடாது. ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற வேகப் பந்து வீச்சாளர்களை கம்பீர் நம்பவேண்டும். தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்களை எளிதாக சேஸ் செய்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.