Publish Date: Mon, 29 Sep 2025 (11:57 IST)
Updated Date: Mon, 29 Sep 2025 (15:09 IST)
இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதிய மெசேஜிங் செயலியான அரட்டை (Arattai), வாட்ஸ்அப்பின் சந்தையை குறிவைத்துள்ளது. சோஹோ (Zoho) குழுவால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
வாட்ஸ்அப் பல ஆண்டுகளாக மெசேஜிங் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் மட்டும் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப், வெறும் மெசேஜிங் செயலி மட்டுமல்ல. இதில் வாய்ஸ் நோட்கள், ஃபைல்கள், மற்றும் யுபிஐ வழியாக பணம் அனுப்புதல் போன்ற அம்சங்களும் உள்ளன.
இந்த நிலையில் வாட்ஸ்அப் நம்முடைய சமூகத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒரு செயலியாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் அரட்டை தற்போது அறிமுகமாகியுள்ள நிலையில் இந்தியர்கள் ஆதரவு இந்த செயலிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் வாட்ஸ் அப் செயலியின் சாதனையை அரட்டை செயலி அடைய முடியுமா என்பது ஒரு பெரிய சவால். வரலாறு நமக்குக் காட்டுவது என்னவென்றால், இதுபோன்ற மாற்றங்களை திட்டமிடுவது எளிது, ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம்.
Mahendran
Publish Date: Mon, 29 Sep 2025 (11:57 IST)
Updated Date: Mon, 29 Sep 2025 (15:09 IST)