Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலியை பிடிக்காமல் அலட்சியம்! வன அதிகாரிகளை கூண்டில் அடைத்த மக்கள்!

Advertiesment
andhra

Prasanth K

, புதன், 10 செப்டம்பர் 2025 (10:57 IST)

கர்நாடகாவில் புலியை பிடிக்க அலட்சியம் காட்டி வந்த அதிகாரிகளை மக்கள் கூண்டுக்குள் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவின் குண்டுலுபேட் தாலுக்காவில் உள்ளது பொம்மலபுரா கிராமம். பந்திப்பூர் தேசிய சரணாலயம் அருகாமையில் அமைந்துள்ள இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று சுற்றி வருவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இரவில் புலி உலா வருவதால் மக்கள் மாலை நேரங்களிலேயே வீட்டிற்குள் பதுங்கிக் கொள்ளும் நிலை இருந்து வந்துள்ளது.

 

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் முறையிட்ட நிலையில் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தொடர்ந்து மக்கள் முறையிட்டதால் புலி பிடிக்க கூண்டு ஒன்றை மட்டும் கொண்டு வந்து கிராமம் அருகே வைத்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அந்த அதிகாரிகளையே பிடித்து அந்த கூண்டுக்குள் போட்டு பூட்டியுள்ளனர். வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் நூதனமாக சிறை பிடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 வேரியண்டுகளில் iPhone 17 Series! அசர வைக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இந்தியாவில் என்ன விலை?