பிரபலமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் விழாக்களுக்காக, 57 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 15 முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2 வரை, கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலத்திற்கு இந்த ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இந்த 57 ரயில்களும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்கள் இதில் அடங்கும். அவற்றில் சில:
வைகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் (சென்னை - மதுரை)
பொதிகை எக்ஸ்பிரஸ் (சென்னை - செங்கோட்டை)
ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (சென்னை - திருச்சி)
உழவன் எக்ஸ்பிரஸ் (சென்னை - மன்னார்குடி)
அன்றியோதயா எக்ஸ்பிரஸ் (தாம்பரம் - நாகர்கோவில்)
திருக்குறள் எக்ஸ்பிரஸ் (கன்னியாகுமரி - ஹஸ்ரத்)
லோகமான்ய திலக் - காரைக்குடி எக்ஸ்பிரஸ்
ரயில்களின் இந்த தற்காலிக நிறுத்தம், இந்த விழா நாட்களில் மேல்மருவத்தூருக்கு பயணம் செய்யும் பக்தர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.