Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

Advertiesment
mahabalipuram

Bala

, செவ்வாய், 18 நவம்பர் 2025 (19:31 IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலை முடியும் இடத்தில் இருக்கிறது மாமல்லபுரம். ஆங்கிலத்தில் இதை மகாபலிபுரம் என அழைக்கிறார்கள். 7ம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கிய துறைமுகமாக இந்த நகரம் விளங்கியது. இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து அங்குள்ள கட்டிடக்கலை சிற்பங்களை தினமும் பார்வையிடுகிறார்கள்.

 
 
சென்னையில் உள்ள சுற்றுலா தளங்களில் மாமல்லபுரம் மிகவும் முக்கியமான ஒன்று. இங்கு கடற்கரை கோயில் மிகவும் பிரபலம். பௌர்ணமி இரவில் கடற்கரை கோவிலில் பார்க்க பலரும் ஆசைப்படுவதுண்டு. பல்லவ மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்ட குகை கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யானைகள் ஆகியவை கட்டிடக்கலை வெளிநாட்டினரையும் ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது.
 
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில்தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கட்டுமான கோயில் என சொல்லப்படுகிறது. இரண்டாம் நரசிம்ம வர்மனால் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் 700-728 காலகட்டத்தில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் பழமையான கட்டுமான கோவில்களில் இது முக்கியமானது. அதேபோல் திராவிட கலைக்கும் இதை உதாரணமாக சொல்கிறார்கள். இந்த கோவில் மாமல்லபுரத்தின் வங்காள விரிகுடா கடற்கரை ஒட்டி இருக்கிறது.
 
எனவே இதைக் காண சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் வருகிறார்கள். இந்நிலையில் மாமல்லபுரத்தில் நாளை கட்டணம் இன்றி பிரதான சின்னங்களை சுற்றி பார்க்கலாம் என தமிழகத் தொழில் துறை அறிவித்திருக்கிறது. உலக பாரம்பரிய வாரத்தை ஒட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை மாமல்லபுரம் சென்றால் எந்த கட்டணமும் இல்லாமல் பிரதான தினங்களை சுற்றிப் பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக