திமுகவுடனான மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி குறித்து, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தஞ்சாவூரில் விளக்கமளித்தார்.
கவிஞர் சினேகனின் தந்தையின் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்ற கமல்ஹாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் முன்னிலையில் பேசினார்.
"நீங்கள் டிவியை உடைத்து போட்டீர்களே, பின் எதற்காக திமுகவில் சேர்ந்தீர்கள் என்று கேட்கிறார்கள். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு. நான் ஏன் மறுபடி திமுகவிற்கு போனேன் என்றால், ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான். அப்படி ஆகக்கூடாது. ரிமோட் மாநிலத்தில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளுக்குள் மாற்றுக்கருத்து இருப்பது அவசியம், அதுதான் ஜனநாயகம். ஆனால், நாடு என்று வரும்போது கூடி நின்றாக வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம். எவனாவது வந்து எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்தக் கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள்,” என்று அவர் தனது கூட்டணியை நகைச்சுவையுடன் நியாயப்படுத்தினார்.
மாநில நலன் மற்றும் 'ரிமோட்' பிறர் கைகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் கமல்ஹாசன் தனது உரையில் தெரிவித்தது எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை..