Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

Advertiesment
Sheikh Hasina

Mahendran

, செவ்வாய், 18 நவம்பர் 2025 (16:24 IST)
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம், அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.
 
2024 ஆம் ஆண்டில் மாணவர்களின் போராட்டத்தின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நேற்று  மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வரும் நிலையில், சீனா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
 
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங், "ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை வங்கதேசத்தின் உள்விவகாரமாகும். வங்கதேசம் விரைவில் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் அடையும் என எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.
 
சீனா, அண்டை நாடான வங்கதேசத்துடன் நல்லுறவு கொள்கையை பேணி வருவதாக தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!