தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22 அன்று நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அரசியல் தலையீடு இல்லாமல் நடந்த தேர்தல்களில், இப்போது ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரின் மறைமுக தலையீடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆளும் கட்சியை சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்தின் உயர் நிர்வாகி, சங்க உறுப்பினர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களை தேர்ந்தெடுக்க நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் முதல்வர் குடும்பத்தின் பெயரையும் பயன்படுத்தி, ஒட்டுமொத்த சங்க கட்டுப்பாட்டையும் தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சங்கத்தின் விதிகளுக்கு எதிரான இந்த செயலால், தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் கலக்கமும் நிலவுகிறது என்று கூறப்படுகிறது.