ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக ஏற்கனவே 50 சதவீதம் இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 500 சதவீதம் வரி விதிக்க போவதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான மிகக் கடுமையான மசோதாவை கொண்டு வர போவதாகவும், அதன்படி எந்த ஒரு நாடும் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தாலும், அந்நாட்டு பொருள்கள் மீது கடுமையாக வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ட்ரம்ப் விதித்த 50% வரியை இந்தியா சமாளித்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டது. எனவே, அமெரிக்கா 500 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் அறிவித்தாலும் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.