லாரி, பேருந்து, கார், ஆட்டோ ஆகியவற்றை ஓட்டும் ஓட்டுநர்கள் வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் அப்போது நடந்து வருகிறது. அதில் சில ஓட்டுனர்கள் மட்டும்தான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலி வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விடுவார்கள்.
அப்படி பல ஓட்டுனர்கள் வண்டியை ஓரமாக நிறுத்தி வண்டியில் வாகனத்தில் இருக்கும் பயணிகளை காப்பாற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் அதுபோன்ற ஒரு சம்பவம் இன்று சென்னையில் நடந்திருக்கிறது.
சென்னை அண்ணா நகரில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற முருகன்(40) என்கிற ஆட்டோ ஓட்டுநர் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனாலும் சமாளித்து ஆட்டோவை சாலை ஒரு பத்திரமாக நிறுத்திவிட்டு மயங்கி சரிந்திருக்கிறார்.
அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் ஏற்கனவே உயிர் வந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.