சினிமாவில் நடிகர் அஜித்தும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அவர்கள் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. முதன்முதலில் அஜித்தை தான் சந்தித்தது பற்றி சோசியல் மீடியாவில் சிவகார்த்திகேயன் பகிர்ந்து இருந்தார். அதற்கடுத்தபடியாக ஐபிஎல் ஆட்டத்தை காண அஜித் மைதானத்திற்கு வர அங்கு சிவகார்த்திகேயனும் இருந்தார்.
அப்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வீடியோவும் வைரலானது. சமீபகாலமாக அஜித்தின் புகைப்படங்கள் வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் பரவ எப்போதும் ரசிகர்களுடன் அஜித் நெருக்கமாகவே இருப்பதாகவே தெரிகிறது. தற்போது அவர் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அவருடைய அடுத்த படமான ஏகே 64 படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனும் அஜித் விஜய்க்கு அடுத்தபடியான ஒரு இடத்தில் இருக்கிறார். அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இப்படி அஜித்தும் சிவகார்த்திகேயனும் சினிமா உலகில் கொடிகட்டி பறக்க அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை அஜித்தின் மகனும் சிவகார்த்திகேயன் மகளும் தற்போது நிரூபித்து இருக்கின்றனர்.
ஏற்கனவே அஜித்தின் மகன் கால் பந்து விளையாட்டில் சிறந்தவர் என அனைவருக்கும் தெரியும். அவருடைய பள்ளியில் கால்பந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. அஜித் மாதிரியே ரேஸிலும் அவர் தற்போது ஈடுபட்டு வருகிறார். அஜித் அவருக்கு பயிற்சியும் கொடுத்து வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் மகள் நன்கு பாடுவார் என்பது மட்டும்தான் தெரியும்.
அவரும் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குகிறார் என்பதற்கு தற்போது ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது. அதுவும் அஜித்தின் மகனும் சிவகார்த்திகேயன் மகளும் ஒரே மைதானத்தில் விளையாடி இருக்கின்றனர். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.