ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றியோ தோல்வியோ அதிமுக போட்டியிட்டிருக்க வேண்டும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.சமீபமாக தேசிய அளவில், மாநில அளவில் நடந்து வரும் அரசியல் நிலவரங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார். டெல்லியில் பாஜக வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் “டெல்லியில் பாஜக, ஆம் ஆத்மியை விட 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளை பெற்றது. காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாஜகவை வீழ்த்தி இருக்கலாம். இனியாவது இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்றார்.

உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள நிலையில் ரயில் எஞ்சினை கூட விட்டு வைக்காமல் லோகோ பைலட் அறைக்குள்ளும் புகுந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பயணிகள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட மக்கள் நெரிசலுக்கு ஏற்ற போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.