டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை நீக்கி வரும் நிலையில் வோடஃபோனும் தனது பிரபல ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியுள்ளது.
வோடஃபோனின் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிட்டெட் கால்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி தினசரி டேட்டா ஆகியவை வழங்கப்பட்டு வந்த நிலையில் குறைந்த விலை ரீசார்ஜ் செய்வோரின் முதல் தேர்வாக இருந்தது.
சமீபத்தில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தங்கள் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை நீக்கிய நிலையில் வோடபோனும் தற்போது ரூ249 ரீசார்ஜை நிறுத்தியுள்ளது. ஆனால் அதை விட குறைவான ரூ239 ரீசார்ஜ் திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இந்த ரூ.239 ரீசார்ஜில் 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் மொத்தமாக 300 எஸ்எம்எஸ்களை அனுப்பலாம். இதனுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி வழங்கப்படுகிறது.
ஆனால் வோடபோன் தனது 1.5 ஜிபி மற்றும் அதற்கும் அதிகமான தினசரி டேட்டா கொண்ட பேக்குகளை வாங்க வாடிக்கையாளர்களை உந்தும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K