Publish Date: Mon, 17 Nov 2025 (16:18 IST)
Updated Date: Mon, 17 Nov 2025 (16:33 IST)
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சஞ்சு சாம்சன் வழிநடத்தினாலும் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது.
இந்நிலையில் அதிரடியாக அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்குக் கொடுக்கப்பட்டு சென்னை அணியில் இருந்து ஜடேஜாவும் சாம் கரணும் டிரேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடி மாற்றமாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த டிராவிட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் சங்ககரா அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிட் வருவதற்கு முன்பாக சங்ககராதான் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.