ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்ய இ-சேவை மையங்களுக்கு அலைவதை குறைக்கும் வகையில் mAdhaar செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு சேவைகளுக்கும், வங்கி கணக்கு திறப்பது, கடன் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் அடையாள அட்டை அவசியமாகிவிட்டது. பலரும் ஆதார் அட்டையை எப்போதும் எடுத்துக் கொண்டு செல்ல முடியாது என்பது ஒரு பக்கமிருக்க, ஆதார் கார்டில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலும், இ-சேவை மையங்களுக்கு அலைய வேண்டியிருப்பதுடன் பணமும் செலவாகிறது.
இந்நிலையில் ஆதார் சேவைகளை செல்போன் மூலமாகவே பெறும் வகையில் mAdhaar என்ற செயலியை UIDAI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை ஃபோனில் இன்ஸ்டால் செய்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் நமது ஆதார் கார்டை டிஜிட்டல் வடிவில் கோப்பாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல், ஆதார் புதுப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல ஆதார் தொடர்பான கூடுதல் சேவைகளையும் இந்த செயலியை பயன்படுத்தி செய்துக் கொள்ள முடியும். எளிய மக்கள் வசதிக்காக பல்வேறு மாநில மொழிகளிலும் இதன் பயன்பாடு அமைக்கப்பட்டுள்ளது.
கூகிள் ப்ளே ஸ்டோரில் mAdhaar என தேடி இன்ஸ்டால் செய்து, விருப்ப மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால், அந்த எண்ணுக்கு ஒரு OTP வரும். அதையும் உள்ளீடு செய்த பின்னர் add adhaar பகுதியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து, மீண்டும் வரும் ஓடிபியை கொடுத்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.
Edit by Prasanth.K