தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 111-வது திரைப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்தப் படம், வரலாற்று பின்னணியை கொண்ட கதைக்களத்துடன் விருத்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகிறது.
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு காணொளியை வெளியிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா இருவரும் ஏற்கனவே ஜெய்சிம்ஹா மற்றும் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
மீண்டும் ஒரு வெற்றி கூட்டணி இணைந்திருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.