எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி சமைத்தால் நல்லதா..?
அனைத்து விதமான சமையலுக்கும் முக்கிய பொருளாக பயன்படுவது எண்ணெய். சமையல் எண்ணெய்யை ஒருமுறை பயன்படுத்திய பின்னர் மீண்டும் சூடுபடுத்தி சமைப்பதால் உடலில் பல பிரச்சினைகளை தரும் அபாயம் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்..
Various Source
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும்போது ஆல்டிஹைடுகள் போன்ற நச்சுப் பொருட்கள் அதிகரிக்கின்றன.
இவை டிமென்சியா, அல்சைமர் போன்ற வியாதிகல் தோன்றுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யில் உள்ள ஹைட்ராக்சி ட்ரான்ஸ் என்ற நச்சு பொருள் டிஎன்ஏ, ஆர்என்ஏவை பாதிக்கும் வாய்ப்புள்ளது.
எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் உண்டாகும் ட்ரான்ஸ் உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.
Various Source
இதனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுடன் இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சமையல் எண்ணெய்யை மறுபடி பயன்படுத்துவதால் வயிற்றுவலி, செரிமான கோளாறுகள் ஏற்படும்.
எண்ணெய் மறு பயன்பாட்டால் பாலிசைக்ளிக் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது.