புனித தலங்களின் பெயர்களில் 'திரு' என்ற அடைமொழி இணைவது போல, நட்சத்திரங்களில் சிறப்பை பெறும் திருநாள் திருக்கார்த்திகை ஆகும். இந்த ஆண்டு திருக்கார்த்திகை திருநாள் 3.12.2025 அன்று வருகிறது.
அதற்கு முதல் நாளான 2.12.2025 மாலை பரணி நட்சத்திரம் தொடங்குகிறது. பாவங்களைப் போக்கும் ஆற்றல் கொண்ட இந்த நாளில், பரணி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அன்று பிரதோஷமும் வருவதால், சிவபெருமான், உமையவள் மற்றும் நந்தியெம்பெருமானையும் வழிபடலாம்.
"பரணி தரணி ஆளும்" என்ற முதுமொழியின்படி, அன்று முருகப்பெருமானை வழிபட்டால், புகழ், செல்வாக்கு, செல்வ வளம், பதவி உள்ளிட்ட சிறப்புகள் கிடைக்கும்.
திருக்கார்த்திகை அன்று வீடுகளில் நல்லெண்ணெயிலும், முருகன் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பஞ்சமுக விளக்கு ஏற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகனுக்குப் பிடித்த அப்பத்தை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
கார்த்திகையில் விரதம் இருப்பதும், அன்னதானம் செய்வதும் சிறப்பானது. ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றி வழிபடுவார்கள்.
சுப்பிரமணியரை நம்பிக்கையுடன் வழிபட்டால், பார்த்த இடமெல்லாம் பாராட்டும், புகழும் கிடைக்கும்.