ஸ்ரீ சத்ய சாயி பகவானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நிறைவடையும் வேளையில், நவம்பர் 16 அன்று நாடு முழுவதும் 'ரதோஸ்வ நாளாக' கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில்அன்புத் தேர் பவனி மிக உற்சாகமாக நடைபெற்றது.
மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த அலங்காரத் தேர் வீதிகளில் உலா வந்தது.
ரத ஊர்வலத்தின்போது, சாயி பகவானின் திவ்ய திருவுருவம் பக்தர்களுக்கு காட்சியளிக்க, பஜனை பாடல்கள், வேத கோஷங்கள் மற்றும் நாதஸ்வர இசை முழங்கின.
மாலை 4.15 மணிக்குத் தொடங்கிய இந்த 'ப்ரேம ரதம்', பக்தர்கள் கோஷமிட, இரவு 7.10 மணிக்கு சுந்தரம் மந்திரை வந்தடைந்தது.
இந்த ரத பவனியில் ஆயிரக்கணக்கான சாயி பக்தர்கள் திரண்டு, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நவம்பர் 23 அன்று சாயி பகவானின் பிறந்தநாளுடன் நூற்றாண்டு விழா நிறைவடைகிறது.