Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

Advertiesment
Karnataka Incentives

Mahendran

, செவ்வாய், 18 நவம்பர் 2025 (13:59 IST)
கர்நாடக அரசு, பெங்களூருவில் உள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக மக்கள்தொகை சுமையை குறைக்கும் நோக்கில், இரண்டாம் தர நகரங்களுக்கு செல்லும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது.
 
தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2025 - 2030-ன் கீழ், மைசூரு, ஹூப்லி - தர்வாத் போன்ற நகரங்களில் தொழில்களை பரவ செய்வதற்காக ரூ. 960 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
பெங்களூரை விட்டு வேறு நகரங்களுக்கு செல்லும் நிறுவன்ங்களுக்கான முக்கிய சலுகைகள்:
 
ரூ. 2 கோடி வாடகையில் 50% தள்ளுபடி.
 
5 ஆண்டுகளுக்கு 100% மின்சார கட்டணத் தள்ளுபடி.
 
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களில் சுமார் ரூ. 50 கோடி வரை, 40% தொகையைத் திரும்பப் பெற வாய்ப்பு.
 
இந்தச் சலுகைகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும், முதலில் விண்ணப்பிக்கும் நூறு ஸ்டார்ட்-அப்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டம் பெங்களூருவின் சுமையை குறைத்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..