விழுப்புரத்தில் புதிய நூலக கட்டிடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் இன்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
திமுக கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக ஆட்சிப் பங்கை கோருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்சி தொடங்கிய நாள் முதல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதே விசிக-வின் முதன்மையான முழக்கமாகும். காலம் கனியும் போது, நிச்சயமாக நாங்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்போம். ஆனால், எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்பதற்கான வாய்ப்பு இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும்.
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றோம். 2026 தேர்தலில், திமுக கூட்டணி விசிக-வுக்கு இரட்டை இலக்கங்களில் இடங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.