நடிகை தீபிகா படுகோன் இந்திய பணியிடங்களில் புதிய தாய்மார்களுக்கான மனிதாபிமான பணி கலாச்சாரம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அதிக வேலைப்பளுவை அர்ப்பணிப்புடன் குழப்புவதே இன்றைய தொழில்துறை சோர்வுக்கு காரணம் என்று அவர் சாடினார்.
மனித உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் போதும். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.
தாயான பிறகு பணியிட சமநிலை குறித்த தனது புரிதல் மாறியதாக தெரிவித்த அவர், தாய்மார்கள் வேலையில் செழிக்க குடும்ப நட்பு கொள்கைகள் அவசியம் என்று வலியுறுத்தினார்.
குழந்தைகளை பணியிடத்திற்கு கொண்டு வருவதை நாம் இயல்பாக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை பராமரிப்பு மற்றும் வேலையை சமநிலைப்படுத்தும் தாய்மார்களின் மன அழுத்தம் குறையும்," என்று கூறினார்.
தனது சொந்த அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, 8 மணி நேர வேலை நேரம் மற்றும் மகப்பேறு விடுப்பு கொள்கைகள் நடைமுறையில் இருப்பதாக தீபிகா தெரிவித்தார்.
உழைக்கும் தாய்மார்களுக்கு அழுத்தம் அல்ல, நடைமுறைத் தீர்வுகளே தேவை என்ற செய்தியைத் தீபிகா முன்வைத்துள்ளார்.