திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உண்டியல் எண்ணும் மையத்தில் நடந்த ரூ.100 கோடி முறைகேடு வழக்கை முதலில் புகாரளித்த முன்னாள் அதிகாரி ஒய். சதீஷ் குமார், நவம்பர் 14 அன்று ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தது, இவ்வழக்கில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், ரயில்வே காவல்துறை கொலை வழக்குப்பதிவு செய்துள்ளது. சதீஷ் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டாரா என்பதை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் பார்த்தசாரதி, முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். விவேகானந்த ரெட்டி கொலை வழக்கைப்போல இதுவும் சந்தேகத்துக்குரியது என்றும் குற்றம் சாட்டினார்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி செய்தி தொடர்பாளர் ராஜீவ் பதிலளிக்கும்போது, சதீஷ் மன அழுத்தத்தால் தான் இறந்ததாகவும், விசாரணையில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களின் பெயரை குறிப்பிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.