Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

Advertiesment
Kantha Movie trailer

vinoth

, வெள்ளி, 14 நவம்பர் 2025 (09:42 IST)
துல்கர் சல்மான் , பாக்யஸ்ரீ போர்ஸ் சமுத்திரக்கனி மற்றும் ராணா ஆகியோர் நடிப்பில் செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள படம் ‘காந்தா’.  பேன் இஜானு சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் ரிலீஸாக உள்ளது. இருந்தாலும் நேற்றிரவு முதலே படத்தீன் ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்பட்டன.

முழுக்க முழுக்க 1950களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த கதையில் துல்கர் சல்மான், நடிப்பு சக்ரவர்த்தி டி கே மகாதேவன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பெரிய ஸ்டார் நடிகருக்கும், அவரை வளர்த்துவிட்ட இயக்குனருக்கும் இடையே நடக்கும் மோதலாக உருவாகியுள்ளது இந்த படம். துல்கர் சல்மானை ஒரு ஹீரோவாக உருவாக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி. ஆனால் அவருடைய கனவு படத்தை இயக்க அவர் விரும்பும்போது அவருக்கும் துல்கர் சல்மானுக்கும் இடையே மோதல் வெடித்து இருவரும் பிரிகின்றனர்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த படம் தொடங்கும்போது மீண்டும் மோதல் வெடிக்கிறது. க்ளைமேக்ஸ் காட்சியை மாற்றவேண்டும் என துல்கர் அடம்பிடிக்க, சமுத்திரக்கனி அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸை அவருக்கு எதிராகத் தூண்டிவிட்டு கலகம் செய்கிறார்.  ஆனால் அவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் காதலர்களாகிவிடக் கதையில் அடுத்தடுத்து திருப்பங்கள்.

இறுதியில் யாருடைய ஈகோ வென்றது. சின்ன சின்ன விஷயங்கள் எப்படி வாழ்க்கையை சிதைக்கின்றன என்பதை தத்ரூபமாகக் காட்டியுள்ளார் இயக்குனர். கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் 50 களின் சினிமாவைப் பார்ப்பது போல உருவாகப்பட்டுள்ளன. இதனால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!