இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தனது அடுத்த படமான 'வாரணாசி' படத்தின் நிகழ்வில் ஆஞ்சநேயர் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக தற்போது சட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
நவம்பர் 15 அன்று நடந்த 'வாரணாசி' படத்தின் நிகழ்வு தொழில்நுட்ப கோளாறால் தாமதமானபோது, ராஜமௌலி பேசுகையில், கடவுள் நம்பிக்கை இல்லாத தனக்கு, தனது தந்தை "ஆஞ்சநேயர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்" என்று கூறியது கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இந்தக் கருத்து இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ராஷ்ட்ரிய வானர சேனா அமைப்பு சார்பில் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை வலுக்கும் வேளையில், அவர் 2011-ல் வெளியிட்ட ஒரு பழைய ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது. அதில், "ராமர் மீது பிரியம் இல்லை, கிருஷ்ணரே தனக்கு பிடித்தவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் 2027-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.