Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் தாய் வீட்டு முன்னோர்களை எவ்வாறு வணங்குவது...?

webdunia
  • facebook
  • twitter
  • whatsapp
share
பெண்கள் தன்னுடைய தாய் வீட்டு முன்னோர்களுக்காக அமாவாசை தினத்தில் தங்களுடைய புகுந்த வீட்டில் என்னதான் செய்வது என்பது பற்றி  தெரிந்துக்கொள்வோம்.

திருமணமான பெண்ணின் பிறந்த வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இறந்தவர்களின் ஆத்மாவானது, புகுந்த வீட்டில் வசிக்கும் பெண்ணினுடைய வீட்டிற்குள் நுழையவே  முடியாது. காரணம் கணவன் வீட்டில் வாழ்ந்த முன்னோர்களின் ஆத்மா, மற்ற ஆத்மாக்களை தங்களுடைய வீட்டிற்குள் நுழைய அனுமதி கொடுக்காதாம்.
 
அமாவாசை தினத்தில் வீட்டிற்கு வெளியே தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய சொம்பில் தண்ணீரை வைத்து விடுங்கள். பெண்கள் தங்களுடைய தாய் வீட்டு  முன்னோர்களை நினைத்து இந்த சொம்பு தண்ணீரை வைக்க வேண்டும். அதுவும் வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
 
இதேபோல் நம்முடைய வீட்டில் நாம் இரவு தூங்கும் போது, நம்முடைய குலதெய்வமும் நம்முடைய முன்னோர்களும் நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். தினமும் சமையலறையில் ஒரு சொம்பு தண்ணீரை, மூடி போடாமல் திறந்தபடியே பெண்கள் தங்களுடைய கையால் வைத்து விடவேண்டும்.

இந்தத் தண்ணீர்  உங்களைக் காண வரும் முன்னோர்கள், உங்கள் வீட்டு முன்னோர்கள், அதாவது பெண்களுக்கு திருமணம் ஆன பின்பு, கணவரின் வீட்டு முன்னோர்கள் தான், அந்தப்  பெண்ணின் முன்னோர்களாக கருதப்படுகிறார்கள்.
 
அவர்கள் உங்களுடைய வீட்டிற்கு வரும்போது மனம் மகிழ்ந்து அந்த தண்ணீரை பருகி, உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்வார்கள் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. இவ்வாறு செய்வதால் முன்னோர்களின் கோபம் சாபம் அனைத்து நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.

Share this Story:
  • facebook
  • twitter
  • whatsapp

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

webdunia
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-03-2021)!