Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

Advertiesment
legend saravanan

Bala

, வியாழன், 20 நவம்பர் 2025 (16:47 IST)
லோகேஷின் உதவியாளர் ரத்னகுமார். தற்போது லெஜெண்ட் சரவணாவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று அவருடைய பிறந்தநாள் என்பதால் பிறந்தநாள் ஸ்பெஷலாக லெஜன்ட் சரவணாவை சந்தித்து கேக் வெட்டி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். லெஜெண்ட் சரவணா தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சஸ்பென்ஸான திரில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 
கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கியவர் தான் துரை செந்தில்குமார். இவர்தான் தற்போது லெஜெண்ட் சரவணாவை வைத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2025 ஆம் வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
 
ஏற்கனவே அவருடைய முதல் படம் மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக வெளியானாலும் அந்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. இருந்தாலும் லெஜெண்ட் சரவணாவின் தன்னம்பிக்கை விடாமுயற்சி அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவரை தூண்டி வருகிறது. இந்த நிலையில் தான் ரத்னகுமார் அடுத்ததாக சரவணனை வைத்து படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. ரத்னகுமாரை பொறுத்த வரைக்கும் சோசியல் மீடியாக்களில் ரஜினிக்கு எதிராக கருத்துக்களை பரவி ரஜினி ரசிகர்களிடம் கடுமையான விமர்சனத்தை பெற்றார்.
 
அவர் விஜயின் தீவிர ரசிகர் என்பதால் அவர் வெளியிடும் கருத்துக்கள் பெரும்பாலும் ரஜினிக்கு எதிராகவே இருக்கும். அதை அவர் தெரிந்து செய்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் பதிவிடும் ஒவ்வொரு கருத்துக்களும் ரஜினிக்கு எதிராகவே இருந்ததனால் ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் சண்டை இருந்த நேரத்தில் ரஜினி ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார் ரத்னகுமார்.
webdunia
 
 அதனால்தான் கூலி திரைப்படத்தில் லோகேஷுடன் ரத்னகுமார் இணைந்து பணிபுரியவில்லை. லியோ திரைப்படத்தில் லோகேஷுடன் சேர்ந்து பணிபுரிந்தார். அந்த படத்திற்குப் பிறகு அவர் லோகேஷ் உடன் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் லெஜெண்ட் சரவணா உடனான கூட்டணி பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!