Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

Advertiesment
சீமான்

Bala

, வியாழன், 20 நவம்பர் 2025 (17:21 IST)
திரைத்துறையில் பணியாற்றி வந்த சீமான் சில திரைப்படங்களை இயக்கினார். அதன்பின் நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார். 
அரசியல்வாதியாக மாறியபின் தொடர்ந்து திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினார். தமிழ்நாட்டுக்கு அதிமுக, திமுக என ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுமே தேவையில்லை என்கிற கொள்கையை அவர் கையில் எடுத்தார்.
 
தமிழ்நாடு தமிழர்களுக்கே என்பது அவரின் அஜெண்டாவாக மாறியது. எல்லாவற்றிலும் தமிழனை முன்னிலைப்படுத்தி பேசினார். ஒருபக்கம், நான் பிரபாகரனின் தம்பி எனவும் மேடையில் முழங்கினார்
. அதேநேரம் அவர் மேடையில் சொன்ன பல கதைகளை கட்டுக்கதைகள், பொய் என பலரும் விமர்சித்தார்கள். ஒரு கட்டத்தில் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறினார் சீமான்.
 
கடந்த பல தேர்தல்களாகவே எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறார் சீமான். கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகள் அவரிடம் இருக்கிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
 
இந்நிலையில் ஜனநாயகன் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்ட சர்வேயில் ‘தமிழ்நாட்டின் ஆளுமை மிக்க தலைவர் யார்?’  என்கிற கேள்விக்கு சீமான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
 
தமிழக முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தை திருமாவளவன் ஆகியோர் கூட முதலிடத்தை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!