Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீகாரில் 10வது முறையாக முதலமைச்சர் ஆனார் நிதீஷ் குமார் : 2 துணை முதல்வர்கள் யார் யார்?

Advertiesment
பீகார் தேர்தல்

Siva

, வியாழன், 20 நவம்பர் 2025 (14:59 IST)
பீகாரில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, நிதீஷ் குமார் இன்று  பாட்னா காந்தி மைதானத்தில் 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆரிப் மொகமத் கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 
துணை முதல்வர்களாக பா.ஜ.க.வைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் ஆகியோர் பதவியேற்றனர். முதல்வர் உட்பட 20 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
 
சட்டமன்றத்தில் போட்டியிடாத நிதீஷ் குமார், சட்டமேலவை உறுப்பினராக நீடிக்கிறார். அவர் மேலும் 5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தால், நாட்டில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைப்பார். 
 
பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற மக்களிடம் சால்வை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டொனால்ட் டிரம்ப் மகன் தாஜ்மஹால் வருகை.. ஆக்ராவில் 200 போலீசார் பாதுகாப்பு..!