Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

Advertiesment
கனிமொழி

Siva

, வியாழன், 20 நவம்பர் 2025 (16:35 IST)
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடுவது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே அரசமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
 
இந்த சூழலில், "உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது? என்று கேட்டபோது, 'கவர்னர் வேலை பார்ப்பது' என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்" என்ற சுவாரஸ்யமான கருத்தையும் கனிமொழி மேற்கோள் காட்டினார்.
 
மசோதாக்களை தாமதப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய கனிமொழி, "இனியேனும் அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்" என்று வலியுறுத்தினார். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் உருவாகிறது 'சென்யார்' புயல்.. தமிழக கடற்கரையை தாக்குமா?