அஸ்ஸாம் மாநில வாக்காளர் பட்டியலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களை சேர்ந்த மக்களை சேர்க்க ஆளும் பாஜக தீவிரமாக முயற்சிப்பதாக, அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகோய் குற்றம் சாட்டியுள்ளார்.
துப்ரியில் பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை சிதைக்கும் நோக்குடன் இந்த சதி நடப்பதாகக் கூறினார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜகவுக்கு ஒரு சுமையாக மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
அஸ்ஸாம் மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பாதுகாக்கும் என்றும் கோகோய் உறுதியளித்தார். தற்போது, அஸ்ஸாமில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.