முன்னாள் வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா அவர்களின் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என வங்கதேச அரசு எச்சரிக்கை விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷேக் ஹசீனா அறிக்கையில் உள்ள கருத்துக்கள் வன்முறையை தூண்டி, சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட அவருடைய செய்திகளை வெளியிட்டால், அந்த ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வங்கதேசம் அறிவித்துள்ளது. முன்னதாக, வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது என்பதும், இந்தத் தண்டனைக்கு வங்கதேசத்திற்கு உள்ளும், இந்தியா உள்பட வெளிநாடுகளிலிருந்தும் எதிர்ப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா அறிக்கைகளை ஒளிபரப்பக்கூடாது என ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை விடுத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.