பிக் பாஸ் நிகழ்ச்சி 6 வாரங்களை கடந்துள்ள நிலையில், கடந்த வாரம் திவாகர் வெளியேறினார். இந்த வாரம் 13 போட்டியாளர்கள் வெளியேற்ற பட்டியலில் உள்ளனர்.
இந்த வாரம் "சோறு, சோப்பு, மாப்பு" என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில், கிச்சன் அணியில் இருந்த கனிக்கும் வி.ஜே. பார்வதிக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. டாஸ்கிற்காக கேட்கப்பட்டதை செய்துகொடுக்க வேண்டும் என்று கனி வாதிட்டார். இதை சாண்ட்ராவிடம் விமர்சித்த பார்வதி, "தான் நியாயமான சமையல்காரர் என்று கனி காட்டி கொள்கிறார்" என்று கிசுகிசுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கனி, "என்னுடைய கேம் கேவலமான கேம்... நான் இனி இந்த கிச்சன் டீமிலேயே இல்லை!" என்று கோபத்துடன் சண்டையிட்டு அணியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
பிக் பாஸ் வீட்டில் கிச்சன் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், இந்த வார வெளியேற்றம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.