Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

Advertiesment
FIFA World Cup 2026

Mahendran

, புதன், 19 நவம்பர் 2025 (15:10 IST)
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை தகுதி சுற்றுகள் முடிவில் 42 அணிகள் இந்த போட்டிக்குத் தேர்வாகியுள்ளன. 
 
நேற்றிரவு நடந்த தகுதி சுற்றுகளின் மூலம் மேலும் 8 அணிகள் தங்கள் இடத்தை உறுதி செய்துள்ளன. இவற்றில் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவில் மூன்று அணிகளும், ஐரோப்பிய கண்டத்தில் ஐந்து அணிகளும் அடங்கும்.
 
போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகியவை நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஆசியாவில் ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், கத்தார், சௌதி அரேபியா, தென் கொரியா, உஸ்பெகிஸ்தான் என 8 அணிகள் தேர்வாகியுள்ளன. 
 
ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா, கேப் வெர்டே, எகிப்து, கானா, ஐவரி கோஸ்ட், மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா என 9 அணிகள் தகுதி பெற்றுள்ளன. வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவில் கராசியோ, பனாமா, ஹைதி ஆகிய 3 அணிகள் தேர்வாகியுள்ளன. 
 
ஐரோப்பாவில் குரோஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து என அதிகபட்சமாக 12 அணிகள் தேர்வாகியுள்ளன. 
 
ஓசினியாவில் நியூசிலாந்தும், தென் அமெரிக்காவில் ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்குவாடர், பாராகுவே, உருகுவே ஆகிய 6 அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
 
மொத்தமுள்ள 48 இடங்களில், மீதமுள்ள 6 அணிகள் விரைவில் நடக்கவுள்ள பிளே-ஆஃப் சுற்றுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?