இந்திய படைகள் மே 2025-இல் பாகிஸ்தானுக்குள் நடத்திய 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் சேதங்களை சரிசெய்யும் பணிகள் ஆறு மாதங்களுக்கு பிறகும் தொடர்வதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.
இந்திய தாக்குதலுக்கு உள்ளான இடத்தில், பாகிஸ்தான் ரிப்பேர் செய்யும் பணியை தொடங்கியுள்ளது. ஜேக்கபாபாத் விமானப் படைத் தளம் தாக்குதலுக்குள்ளான விமான நிறுத்துமிடத்தின் கூரை படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது. முழு மறுகட்டமைப்புக்கு முன் உள் சேதத்தை சரிபார்க்கவே இது நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காட்சிகள், தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய இந்த துல்லியமான தாக்குதலின் மூலம் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் முக்கிய இராணுவ தளங்கள் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு இன்னும் வரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.