Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசுத்த தண்ணீரையும் நல்ல தண்ணீராக மாற்றும் தேத்தாங்கொட்டை !!

webdunia
நீங்கள் அருந்தும் கேன் வாட்டரில் இந்த பாரம்பரிய மூலிகை பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான குடிநீராக மாற்றி வைக்கலாம்.


இதன் மூலம் நோய் தொற்றுகள் எதுவும் ஏற்படாமல், குடிநீரில் சத்துக்கள் அதிகரித்து அதை குடிக்கும் நமக்கும் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு நமக்கு தேவையான பொருட்கள் என்ன? எவ்வாறு நல்ல தண்ணீராக மாற்றுவது என்பது குறித்து பார்ப்போம். 
 
தேத்தாங்கொட்டை 1, வெட்டிவேர் சிறிதளவு, வெந்தயம் 20 கிராம், மிளகு 25 கிராம், சீரகம் 25 கிராம். தேத்தாங்கொட்டை எனப்படும் ஒரு பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 
 
இந்த கொட்டை இயற்கையாகவே நீரை சுத்திகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. வெட்டிவேரும் அதே போல தண்ணீரை சுத்திகரித்து குளுமையாக வைத்துக் கொள்ளும். வெந்தயம், மிளகு, சீரகம் அத்தனையும் நம் உடலுக்கு நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கக்கூடிய அதீத சக்திகளை கொண்டு உள்ளது. 
 
எனவே இவற்றை ஒரு சிறிய காட்டன் துணியில் வைத்து முடிந்து தண்ணீருக்குள் போட்டு ஊற விட்டு விடவேண்டும். இதனை மண்பானை தண்ணீரில் வைத்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.

கூடுமானவரை தண்ணீரை மண் பானையில் அல்லது செம்பு பானையில் ஊற்றி குடிப்பது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். சக்கை தண்ணீரையும் நல்ல தண்ணீராக ஆரோக்கியம் மிகுந்த மற்றும் சுவையான தண்ணீராக மாற்றக்கூடியதுதான் இந்த தேத்தாங்கொட்டை.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

க்ரீன் டீயில் துளசி இலைகளை சேர்த்து குடிப்பதால் என்ன நன்மைகள்...?