சிவகார்த்திகேயன் பாணியில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து ஆரம்பநிலை வெற்றியை பெற்றுள்ளார் கவின். அவர் நடிப்பில் வெளியான டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார்.
ஆனால் டாடா படத்துக்குப் பிறகு அவர் நடித்த படங்களான ஸ்டார், ப்ளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தன. நேற்று அவர் நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அதன் வெற்றி தோல்வி அடுத்த வாரத்தில்தான் தெரியும்.
இந்நிலையில் கவின் பற்றி பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ள கருத்து சினிமா வட்டாரத்தில் புகைச்சலைக் கிளப்பியுள்ளது. அவரது யுடியூப் சேனலில் “கவினை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். அந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை போடலாம் என சொல்லியுள்ளார். ஆனால் கவினோ ஏ ஆர் ரஹ்மான் எல்லாம் அவுட்டேட் ஆகிவிட்டார் என சொல்லி ஜென் மார்ட்டின் என்ற இளம் இசையமைப்பாளரை பரிந்துரைத்தாராம் எனக் கூறியுள்ளார். இதையடுத்து இப்போது கவின் மேல் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.