கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அதில் மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
1. நிலம் கையகப்படுத்தல் மற்றும் செலவு: மெட்ரோ வழித்தட சாலைகள் 22 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். இதற்காக நிலம் மற்றும் கட்டிடங்களை கையகப்படுத்தினால் அதிக செலவு ஏற்படும் என்றும், இது பொதுமக்களை பாதிக்கும் ஒரு சமூக சவால்.
2. காலாவதியான மக்கள் தொகை தரவுகள்: திட்ட அறிக்கையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைப் புள்ளிவிவரங்களை பயன்படுத்தியிருப்பது தவறு. தற்போதைய மக்கள் தொகை, அண்டை நகரங்களில் இருந்து வந்து செல்லும் மக்கள் மற்றும் மெட்ரோவின் அவசியம் குறித்து புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
3. பயணிகளின் எண்ணிக்கை கணிப்பு: ஒரு நாளைக்கு 5.9 லட்சம் பயணிகள் மெட்ரோவை பயன்படுத்துவார்கள் என்று கணக்கிடப்பட்டிருப்பது மிகவும் அதிகமாக தோன்றுகிறது என்று மத்திய அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. பிற வாகனங்களில் பயணிப்பவர்கள் மெட்ரோவுக்கு மாறுவார்களா என்பது கேள்விக்குறியாக இருப்பதால், பயணிகளின் எண்ணிக்கை கணிப்பை மேலும் துல்லியமாக வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.