Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

Advertiesment
Bussy anand

Mahendran

, சனி, 22 நவம்பர் 2025 (11:32 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை மீண்டும் மக்களை சந்திக்க இருப்பதாகவும் அவரை 2000 பேர் மட்டும் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: 
 
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 
 
வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழக தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..