Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

Advertiesment
miss universe

Siva

, வெள்ளி, 21 நவம்பர் 2025 (12:41 IST)
2025ஆம் ஆண்டுக்கான 'மிஸ் யுனிவர்ஸ்' அழகிப்போட்டியில், மெக்சிகோவை சேர்ந்த ஃபாத்திமா போஷ் மகுடம் சூடினார்.
 
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், "மிஸ் யுனிவர்ஸ் மெக்சிகோ 2025, ஃபாத்திமா போஷ்-க்கு வாழ்த்துகள். தாய்லாந்து உங்கள் அடுத்த பெரிய தருணத்திற்கான மேடை. இந்த பயணம் பெருமை, மகிழ்ச்சி மற்றும் மெக்சிகோவின் தனித்துவமான ஒளியால் நிரப்பப்படட்டும்! ஒளிருங்கள், ராணி!" என்ற வாழ்த்துடன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
முதல் ஐந்து இடங்கள்:
 
வெற்றியாளர்: ஃபாத்திமா போஷ் (மெக்சிகோ)
 
1வது ரன்னர்-அப்: தாய்லாந்து
 
2வது ரன்னர்-அப்: வெனிசுலா
 
3வது ரன்னர்-அப்: பிலிப்பைன்ஸ்
 
4வது ரன்னர்-அப்: கோட் டி'ஐவொயர்
 
இந்த போட்டியில், இந்திய அழகி மணிகா விஸ்வகர்மா நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு, டாப் 12 இடங்களுக்குள் நுழையாமல் வெளியேறினார். இறுதி சுற்றுகளுக்கு தேர்வான டாப் 12 போட்டியாளர்களில் மெக்சிகோ, தாய்லாந்து உட்பட பல நாடுகள் இடம்பெற்றன.
 
இந்தியாவின் சாய்னா நேவால் இந்த போட்டிக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!