ஐயப்ப வழிபாட்டின் அடிப்படைத் தத்துவம் மிகவும் எளிமையானது: அது ஒழுக்கம். ஒழுக்கத்துடன் வாழ்வதன் மூலம் மனதில் அமைதி நிலைக்கிறது. அமைதி குடிகொள்ளும்போது, கர்வம் மறைந்து, பக்தி மேலோங்குகிறது. பக்தியின் உச்ச நிலையே சரணாகதி ஆகும். "உன்னைத் தவிர வேறு கதியில்லை" என்று நம்மை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டால், "நமக்கு எப்போது என்ன தர வேண்டும் என்று அவனுக்குத் தெரியும், அவன் பார்த்துக் கொள்வான்" என்ற சாத்வீக மனநிலை தானாகவே வந்துவிடும்.
இந்த சாத்வீக மனநிலையை உருவாக்கவே ஐயப்ப விரதமும் பூஜைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. புராணங்கள் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று சிறப்பிக்கின்றன. தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்தினமும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரத்தை 11 முறை ஜபிப்பதன் மூலம் மனோபலம் பெருகும். இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும், கவலைகளும் விலகும்.
ஓம் பூதாதி பாய வித்மஹே
ஓம் பூதாதி பாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி}
தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்
பூதநாத ஸதானந்தா
சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ
சபரிமலை நாதனை, இந்த மகா மந்திரங்களை ஜபித்து வழிபடுவதால், அவர் அருளும் பொருளும் அள்ளித்தருவார்.