ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில், முதல் நாளே 19 விக்கெட்டுகள் விழுந்தன. இன்று இரண்டாவது நாளிலும் விக்கெட்டுகள் மளமளவென விழுந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்காட் போலண்ட் நான்கு விக்கெட்டுகளையும், பிரண்டன் டாகெட் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
தற்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற 220 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்து இன்றே ஆட்டம் முடிவுக்கு வருமா அல்லது ஆஸ்திரேலியா வெற்றியை பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.