ரஜினி 173 படத்தின் நிலைமை இப்போதைக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. சுந்தர் சி அந்த படத்திலிருந்து விலகியதும் பல கருத்துக்கள் வெளியாகி வந்தன. டெல்லியில் இருந்து சென்னை வந்ததும் கமல் என்னுடைய ஹீரோவுக்கு கதை பிடிக்கவில்லை என்றால் நிச்சயமாக பண்ண மாட்டேன் என்று கூறினார். அதன் பிறகு அனைவருக்கும் ஒரு தெளிவு பிறந்தது. சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் சுந்தர் சி விலகிவிட்டார் என்று ஒரு தெளிவுக்கு வந்தனர்.
அதன் பிறகு சுந்தர் சி வெளியிட்ட அந்த திடீர் அறிக்கையால் கமலுக்கும் ரஜினிக்கும் இது ஒரு பெரிய அவமானம். எப்படி இனிமேல் ரஜினி கமல் முன்பு சுந்தர்சி முழிப்பார் என்றெல்லாம் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் ரஜினி173 படத்திற்காக கதையை தேடிக்கொண்டிருந்த கமல் பிரபல நாவலாசிரியர் ராஜேஷ் குமாரிடம் கதைக்காக அணுகி இருப்பதாக சமீபத்திய ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்பதால் ராஜேஷ் குமாரிடம் இருந்து கதையை வாங்கலாம் என்ற ஒரு முடிவுக்கு கமல் வந்திருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் இயக்குனர் யார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ரஜினியிடம் கதை சொல்ல ஒரு இயக்குனர் ரெடியாக இருக்கிறார். ஆனால் அவர் ரஜினி 173 படத்தை இயக்குவாரா என்பது சந்தேகம். அவர் வேறு யாருமில்லை நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி. தற்போது அவர் சூர்யாவை வைத்து கருப்பு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டது. அவரிடம் ஒரு கதை இருப்பதாகவும் அந்த கதையை ரஜினிக்கு சொல்ல இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆர் ஜே பாலாஜியிடம் கதை கேட்க ரஜினி தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியிடம் ஆர் ஜே பாலாஜி சொல்லும் கதை ஏற்கனவே விஜய்க்காக சொல்லப்பட்ட கதையாம். கருப்பு திரைப்படத்தின் கதையும் கூட விஜய்க்காக சொல்லப்பட்ட கதைதான். இருந்தாலும் கதை கேட்டு அது ரஜினிக்கு பிடித்தால் மட்டுமே அடுத்த கட்ட வேலைகள் ஆரம்பமாகும். ஆனால் ரஜினி உடனே ஓகே சொல்ல மாட்டார். கருப்பு திரைப்படத்தின் சில வீடியோக்களை போட்டு காட்டிய பிறகு அது பிடித்தால் மட்டுமே ரஜினி ஆர் ஜே பாலாஜிக்கு ஓகே சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை கருப்பு திரைப்படம் ஹிட்டானால் ரஜினி 173 படத்தை கூட ஆர் ஜே பாலாஜி இயக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆர்.ஜே பாலாஜியை பொருத்தவரைக்கும் அவரும் கிட்டத்தட்ட சுந்தர் சி மாதிரி தான். சமூக சிந்தனை மிக்க படங்களையும் எடுப்பார். அதேசமயம் அவருடைய படத்தில் ஹியூமர் அதிக அளவு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம் கருப்பு திரைப்படத்தை பொறுத்த வரைக்கும் அது ஒரு ஆக்சன் திரில்லர் படமாகவே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஆக்ஷனிலும் கலக்குவார். அதனால் எதிர்காலத்தில் ரஜினியை இயக்கக்கூடிய வாய்ப்பு ஆர் ஜே பாலாஜிக்கு வந்தால் அது ரஜினி 173ஆக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.