இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் நட்சத்திர வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனாவுக்கு வரும் நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்து கடிதம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருதி மந்தனா, ஹிந்தி இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஏற்கெனவே நிச்சயதார்த்தம் செய்துகொண்டதை வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தனர்.
பிரதமர் மோடி, இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மந்தனா, சமீபத்திய உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு, 434 ரன்கள் குவித்து, இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றியிருந்தார்.
மந்தனா-பலாஷ் ஜோடிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.