ரஜினி இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். திடீரென ரஜினியின் நண்பர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. அதைவிட ஆச்சரியமாக அந்த படத்தை சுந்தர்.சி இயக்கப்போகிறார் என ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஏனெனில் அருணாச்சலம் படத்திற்கு பின் சுந்தர்.சி-யும், ரஜினியும் இணையவே இல்லை. ஒருபக்கம் கடந்த பல வருடங்களாகவே வன்முறை காட்சிகள் கொண்ட ஆக்சன் படங்களை மட்டுமே ரஜினி நடித்து வருவதால் சுந்தர்.சி போன்ற ஜாலியான, கலகலப்பான படங்களை கொடுப்பவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பது நல்லது என பலரும் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தார்கள்.
ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் சுந்தர்.சி. முதலில் இந்த அறிவிப்பை வெளியிட்டது சுந்தர் சி என் மனைவியும் காண மனைவி நடிகை குஷ்புதான். சுந்தர்.சி சொன்ன ஹாரர் காமெடி கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகிவிட்டார் என சொல்லப்பட்டது.
தற்போது ரஜினி படத்திற்கு புதிய இயக்குனரை தேடும் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் ஒரு பேருந்தில் சுஹாசினி, குஷ்பு மற்றும் கமல் ஆகிய மூவரும் பேசிக் கொண்டே பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.