நடிகர் விஜய் நடிகராக இருக்கும் போது தனது நற்பணி மன்ற இயக்கங்களை விஜயின் மக்கள் இயக்கமாக மாற்றினார். அப்போதே அவரின் கட்சி மன்ற நிர்வாகிகள் அரசியலுக்கு தயாரானார்கள். ஒருபக்கம் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜயை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்கு காரணம் விஜயின் படங்களுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு.
விஜய்க்கு பல லட்சம் ரசிகர்கள் உருவானதால் அவரை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என எஸ்.ஏ.சி ஆசைப்பட்டார் ஆனால் ஒரு கட்டத்தில் மங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றார். அதன்பின் தனியாக செயல்பட துவங்கிய விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தற்போது அரசியல் தலைவராக மாறிவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதேநேரம் இதுவரை அவர் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி சேரவில்லை.
ஆனால் அவரை அதிமுக பாஜக கூட்டணிக்கு இழுக்கும் வேலைகள் நடந்து வருகிறது. விரைவில் விஜய் இதற்கு சம்மதிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விஜய் தனித்து நின்றால் ஓட்டுகள் பிரிந்து அது திமுக வெற்றி பெறவே உதவும் என பலரும் நினைக்கிறார்கள்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் பப்லு பிரித்திவிராஜ் என்னோட ஓட்டு விஜய்க்குதான். விஜய் சரியான ஆளா? தப்பான ஆளா? எனக்கு தெரியாது. ஆனால் ஒரு மாற்றம் வரணும்.. கிரிக்கெட்ல புது பால் சைனிங்கா இருக்கும். ஒரு வேகம் இருக்கும். ஒரு பவுன்ஸ் இருக்கும். அது மாதிரி அரசியலிலும் மாற்றம் வரும்ணு நான் நம்புறேன்.. விஜய் 10,000 கோடிக்கு மேல சம்பாதித்து விட்டார். எனவே மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு இறங்கி வருகிறார். அவரை நான் ஆதரிக்கிறேன்' என சொல்லி இருக்கிறார்.