மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமி நேற்று பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்திலேயே, மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அவரது தந்தைக்கு பள்ளி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
சிறுமி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், ஆசிரியர்களின் துன்புறுத்தலே மகளின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.