ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்த இங்கிலாந்து அணி, தற்போது பந்துவீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் மிகச் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டு விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.