Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதான் ஐபிஎல்-ஐ உலகின் தலைசிறந்த தொடராக மாற்றியுள்ளது- கங்குலியின் பெருமித டிவீட்!

webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:24 IST)
நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் போட்டி பொழுதுபோக்கின் உச்சமாக திகழ்ந்தது என ரசிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

நேற்றைய ஐபிஎல் போட்டியைப் பார்த்தவர்கள் 17 ஆவது ஓவருக்கு முன்புவரை ராகுல் திவேட்டியாவை திட்டாமல் இருந்திருக்க முடியாது. டி 20 போட்டி என்பதையே மறந்து 23 பந்துகளுக்கு 17 ரன்களை சேர்த்திருந்தார் அவர். அதுவும் 224 ரன்களை சேஸ் செய்யும் ஒரு போட்டியில்.இவரின் மந்தமான ஆட்டத்தால் ஒரு கட்டத்தில் போட்டி பஞ்சாப் பக்கம் சென்றது. ஆனால் அதன் பின் விஸ்வரூபம் எடுத்து ஒரே ஓவரில்  5 சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெறவைத்தார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ஒரே நாளில் ஹீரோவானார் திவேதியா.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் இந்த போட்டி குறித்து டிவிட்டரில் ‘என்ன ஒரு அற்புதமான போட்டி. இதுதான் தான் ஐபிஎல் போட்டி உலகின் மிகச்சிறந்த டி20 லீக் தொடராக இருப்பதற்கான காரணம். மிகச்சிறந்த திறமையாளர்கள் இந்த ஆட்டத்தில் பங்களித்துள்ளார்கள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

இப்படி ஒரு ஆட்டத்தை நான் பாத்ததே இல்ல! – சச்சினுக்கு ஷாக் குடுத்த பூரன்!